சில நாள் சில வேலை
சேரும் இரு பாம்புகள்
பார்த்து உறைந்த
தருணம்.
குளிரில்
அம்மாவின் அணைப்பில்
எங்கோ ஓடிய எண்ணங்களில்
மறைந்து மறந்து நிறைந்தது நீயோ.
இறந்ததும் எங்கே போவோம் என்றே
கண்ணீரோடு பயந்த இரவுகளில்
இடுகாட்டில் தேடலில்
அமைதி.
அமர்ந்த
திட்டுகளின் எறும்புகள்
முத்தமிட்டு ஊர்ந்து மொழிகையில்
சாரமோ மின்சாரமோ பூச்சரமோ
உன் பெயரோ
நாமோ.
கருங்குயில்
இணைக்காக இரைஞ்ச
இறையாய் விரிந்தது
மேகமோ.
நட்சத்திரமோ
பூகம்பமோ
மோகமோ
தேனோ
ஓ
ஆ
அ
அ.