மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து
போம்போ தவளோடு போம்.
- மூதுரை
பாடல் 20
- மூதுரை
பாடல் 20
மருவினிய சுற்றமும் - சேர்ந்த, சார்ந்த இனிய சுற்றமும் (சொந்தமும், சுற்றி இருப்போரும்), வான்பொருளும் - வானம் போல பரந்த செல்வம் (அ ) வான் நட்சத்திரங்கள் போல மின்னும் அளவில்லாத செல்வம், நல்ல உருவும் - நல்ல உருவம் என்பதை மற்றவர் மனதில் நமக்கான உருவம் நல்லதாய் இருக்கும் என, உயர்குலமும் எல்லாம் - நல்ல குடும்பம் எனும் பெயர் வரவும் (இந்த அனைத்தும்), திருமடந்தை ஆம் போது அவளோடும் ஆகும் - மணப்பெண் (அ ) திருமகள் வருகையில் அவளோடு சேர்ந்து வரும், இருக்கும். அவள் பிரிந்து போம் போது அவளோடு போம் - அவள் பிரிந்து செல்கையில் அவளோடே சென்று விடும்.
இத்தகைய செல்வம் அனைத்தும் திருமகள் உன்னோடு இருக்கையில் இருக்கும் , அவள் பிரிந்து செல்கையில் அவளுடனே சென்று விடும்.
நல்ல மனைவி இருந்தால் அனைத்தும் இருக்கும், அவள் பிரிந்து போனால்,அதோடு அனைத்தும் பிரிந்து போகும்.