செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நீண்ட பொழுதில்

உன்னைக் கண்டதை
 நட்சத்திரங்களிடம் சொல்லி வைத்தேன் 
அவையும் உன் போல்
கண் சிமிட்டி சிணுங்குகின்றன.. 

புதன், 20 ஏப்ரல், 2011

இயல்

நீ தீண்டும் இன்பமே - எனை 
வாழச் சொல்லுதோ - அதுவே
ஜீவ நாடியோ  

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நீ

மனிதன் -
     பேசத்  தெரிந்த மிருகம்
அவன் உலகம் -
     நாகரிகம் போர்த்திய நரகம்
    பிணம் தின்னும் பிணங்களின் மயானம்
எனக்கு - 
   நீ நம்பிக்கையின் நறுமணமாய்

வியாழன், 14 ஏப்ரல், 2011

நான் கூட விட்டில் தான்
நான் சுற்றுவது மெழுகையல்ல
உலகை
நான் தேடுவது தீபமல்ல
ஒளியின் உடல் கூறு.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011