ஞாயிறு, 15 மே, 2011

மொழி

                                               காற்றுடன் பேசுவதாய் எழுதிய வரிகள் இவை

உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா ?
     ம்ம்.
நாய்களோடு நீ பேசுவாயாமே !
     கொஞ்சம் கொஞ்சம்.
பிடித்திருக்கிறதா ?
     பல நாய்களுக்குப் பிடிக்கும்
     பல மனிதர்களுக்குப் பிடிக்காது.
அது போகட்டும்
இந்தா புயலின் இலக்கணம் !
உனக்குப் பயன்படும்.
     வேண்டாம்
     முடிந்தால் 
     சருகுகளின் லிபி சொல்லித்தா.  

2 கருத்துகள்: