முழுமதிக் காட்டில் மூலிகை வாசத்தில், காட்டுப் பன்றிகள் ஓலமிட, உடல் ஒடுங்க,பற்கள் படபடக்க நடந்து, ஆஆஆஆஆஆஆ அந்த அழைப்பு தான் அந்தச் சாரல் தான் அந்த அந்தகாரந்தான்,
எத்தனை பேரை இந்த அருவி பதம் பார்த்திருக்கும். எத்தனை பேர் இந்த அருவியில் பக்குவம் அடைந்திருப்பார்கள்.
அடிமேல் அடியாய் அருகில் சென்று நனைந்து அமர்ந்தேன். நூற்றாண்டுகள் தாண்டிய குரல் கேட்டது.
இங்கு கொட்டும் அருவிகளில், அகத்தியர் அருவிக்கு ஒரு குணம் உண்டு. எந்த அருவியும் அதற்கும் பாறைக்கும் ஆன இடைவெளியில் நம்மை எளிதில் அனுமதிக்காது. இந்த அகத்தியர் அருவியில் அருவிக்கு உள் சென்று, பாறையில் அமர்ந்து ரசிக்கலாம் அதன் பின்னழகை.
இந்தத் துளிகள் எவ்வளவு காலம் முன் தோன்றியிருக்கும், எத்தனை உயிர்களை வருடி இருக்கும். நீர் உயிர் நாடிதான், வாழ்க்கைக்கான அமுது தான்.
நான் நாய்களோடு பேசுவேன், நெடு மரங்களோடும் பேசுவேன். இப்போதெல்லாம் பாறைகளுடனும் பேசுகிறேன்.
பாறை சொன்ன கதை, அடுத்து..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக