சக்தி இப்போதும் இனி எப்போதும்
நான் தெய்வத்தின் அம்சம்
எனக்கு நோ வில்லை. சா வில்லை.
நான் அமிர்தம் உண்டேன்.
இப்போதும் இனி எப்போதும் எல்லையற்ற
தெய்வத் துடன் கலந்து விட்டேன்.
இனி எப்போதும் எனக்குத் துன்பம் இல்லை.
எப்போதும் எனக்கு விடுதலை.
- மகாகவி பாரதி.