நான் நாத்திகன் ஆனது எப்போது? தெரியாது. ஏன்? சொல்கிறேன். சாமியாட்டம், பேய் ஆட்டம் இதெல்லாம் பார்த்து பயந்து ஒழிந்து கொண்டிருந்த நேரம், ஒரு தாத்தா சொன்னார் : 'ஏன் என்று கேட்காதவன் முட்டாள்'. அந்தத் தாத்தா மீது கோபம் எனக்கு. காரணம், அம்மாவிடம் கேட்டால், 'அப்டிலாம் பேசாதடா '. அப்பாவிடம் - 'அப்புறமா சொல்றேன் போய் தூங்கு'. நானும் மறந்து விட்டேன் கேட்பதை . அதே தாத்தா சொன்னதென்று பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொன்னது : 'ஏன், எதற்கு, எப்படி என்று கேள்'. தயங்கித் தயங்கி அவரிடம் கேட்டேன், 'சார் ஏன் இப்டி கேள்வி கேக்கணும்' ? அவர் சொன்னார் : 'நீ கேட்க ஆரம்பித்து விட்டாய், இனி கேள்வி கேட்காமல் உன்னால் இருக்கமுடியாது'. நன்றி அந்தத் தாத்தாவிற்கு (பெரியார்) இல்லை. பதில் சொல்லாது விட்ட என் பெற்றோருக்கு.
இன்று முது கலை மருத்துவம் படிக்கும் நானும், என் சீனியர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்த பொழுது, கோவிலுக்குச் செல்லும் பழக்கம் இல்லை என்று நான் சொல்ல, மாலையில் கோவிலுக்குச் செல்வோமே என்றார். சரி என்றேன். அங்கே, நான் கை ஏந்தி நிற்கையில் ஐயர் வந்து பிச்சை போல் திருநீறு போட்டார். திடீர் அன்புடன் அந்த சீனியர் விபூதியை என் நெற்றியில் இட்டு, பார் கடவுள் உன் மனதை மாற்றி விட்டார். நீ திருநீறு கூட வைத்துக்கொண்டாய் என்றார். ஒரு மனிதன் தனது சக மனிதனின் பழக்கங்களை மாற்ற முயல்வதும், அவ்வாறு மாற்றினால் அவனுக்கு உண்டாகும் ஆனந்தமும் அளவு இல்லாதது. அவருக்கும் அவ்வளவு ஆனந்தம் முகத்தில்.
சிறிது நேரம் கழித்து நான் சொன்னேன், 'நான் நாத்திகம் கற்றதே கோவிலில் தான். இந்த விபூதி எல்லோரும் ஒரு நாள் சாம்பல் ஆகவே போகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவே தவிர, இதில் கடவுளின் அருள் ஒன்றும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை'.' உங்கள் மீதுள்ள அன்பால் வைத்துக்கொண்டேன், நம்பிக்கை என்பது என்னைப் பொறுத்தது. கல் உங்களுக்கு கடவுள், எனக்கு கலை'.
பிறகு கோவிலுக்கு ஏன் வந்தாய் என்றொரு கேள்வி. மனிதன் இங்கே தன்னை மறந்த நிலையில் இருக்கிறான். எதுவும் யோசிக்காமல் ஏமாறுகிறான் ஏமாற்றப்படுகிறான். என் பாட்டன், பூட்டனின் தமிழ்ச் சமூகம் எவ்வளவு அறிவியலை இந்த கலைக்குள் நிரப்பியிருக்கிறது என்பதை உணர என்று சொன்னேன்.
எல்லோரும் வணங்கும் கடவுளை கோவிலிலே எதிர்த்துப் பேசுவது தான் பகுத்தறிவா என்று கேட்டார். ' நம்பிக்கை இல்லாதவனை நீங்கள் கட்டாயப் படுத்தும் பொழுது, நீ செய்துகொள் எனக்கு வேண்டாம் என்று சொல்லும் நான், செய்ய வைத்தே தீர வேண்டும் என்று இருக்கும் நீங்கள் இதில் எது பகுத்து அறிவது என்று அறிந்து கொள்ளும்' என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்..
//மனிதன் இங்கே தன்னை மறந்த நிலையில் இருக்கிறான். எதுவும் யோசிக்காமல் ஏமாறுகிறான் ஏமாற்றப்படுகிறான். என் பாட்டன், பூட்டனின் தமிழ்ச் சமூகம் எவ்வளவு அறிவியலை இந்த கலைக்குள் நிரப்பியிருக்கிறது என்பதை உணர என்று சொன்னேன்// -cant accept ur explanation...rejected...
பதிலளிநீக்கு௧) மனிதன் தன்னை மறந்து கோவிலில் இருக்கிறான். பக்தி அந்த மோன நிலைக்கு கொண்டு செல்லும். நான் பாத்துருக்கேன் உணர்ந்துருக்கேன். திருவாசகம் படிக்கறப்ப வர்ற மோன நிலை வேற எதுலையும் கிடைக்கல. மனிதன் தன்னை மறந்த நிலை தான் நல்ல நூல்களின் நோக்கம். மோன நிலை ௨) யோசிக்காம ஏமாந்து போறான், அத நான் பாக்கணும். எப்படி எமாத்தராங்கனு தெரிஞ்சுக்காம நான் எப்படி மத்தவகளுக்கு சொல்லி புரிய வைக்க முடியும்?? எப்படி ஏமாத்தறதுன்னு தெரியாம எமாத்தரவங்கிட்ட இருந்து நானும் தப்ப முடியாது. ௩)தஞ்சை பெரிய கோவில் புல் தரையில நாள் முழுக்க சாப்டாம உக்காந்து இருக்கேன், கல்வெட்டுகள படிக்க முடியலையேனு அழுதுகிட்டே பல நாள் கல்வெட்டுகள தடவி பாத்துருக்கேன். முக்கிய காரணம் கலை திறமை . அதுதான் கோவிலுக்கு என்ன கூட்டிட்டு poguthu என் மூதாதைகளின் அறிவு அளப்பரியது. black hole ம் சரி,subatomic theories ம் சரி, தமிழில் இருக்கு. இருக்கறத தேடிட்டே இருக்கேன் இல்லாதத கொண்டு வரணுனு நினைக்கறேன். அத கோவில்களில் தான் தேட
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு