இது ஓர் ஏக்கம். வியப்பு. லூசு என்று எல்லோரும் சொல்லும் சிலரின் அன்றாட வாழ்க்கை. அவள் யார்? தெரியாது. எப்படி இங்கே? தெரியாது. ஏன் இப்படி ? தெரியாது.
ஒரு அழுக்குச் சட்டையோடு எப்போதும் என் விடுதியின் சுவற்று நிழலில் இருப்பவள். கொட்டிவைத்த மணலில் புரண்டு கொண்டு, உடலின் மறைவுப் பகுதிகளை பற்றிக் கவலைப்படாது இருப்பவள். கலைந்த முடி, கவலை காட்டாத முகம். எப்போதாவது சிறு நகை. அடடா என்ன வாழ்க்கை? கஞ்சா அடித்து விட்டு ஒருசிலர் அவள் பக்கத்தில் படுக்கும் பொழுது அவளின் ஈன ஸ்வரம். வெட்கமோ கற்பென்பதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவள், பிடிக்காதார் தொடுகையில் சினுங்கிடும் குழந்தையாய்.
அந்த மணற்பறப்பு அவள் சிம்மாசனம். நாலடி நிழலோ சமயத்தில் ஓரடி நிழலோ, அவளின் வீடு. என்னால் முடிந்தது, இரவில் எனக்குத்தரப் படும் ஒற்றை வாழைப் பழத்தை அவளுக்குக் கொடுப்பது.
அவள் தருவது என்னைப் பார்த்ததும் சிறு சிரிப்பு.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு