எனக்கு வேறு வேலையில்லை
வேளைமறந்து என்னையே பாட
அணுவிலிருந்து அண்டம்வரை
நீளும் என்னியல்பும் எண்ணியல்பும்
மண்ணும் மன் மதனமும்
புண்ணும் பல பிணமும்
பித்தமும் ஓட்டு நத்தமும்
பிரிந்த மஞ்சள் சூரியனும்
பறித்த ஊமத்தம் பூவும்
ஈனமும் மெல்லீனமும்
உள்ளும் உள்ள
கடமும்
அட கடவுளும்
கடை உளுந்தும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக