விருப்பம் ஒன்றான பின்
மறுப்பும் உண்டோ.
அலைபோல் ஆசைகள்,
வலைபோல் சூழ்நிலை,
காற்றில் நிற்கும்
ஒற்றை விதையாய்,
எத்தனை காலம்
எத்தனை பாரம்.
விரும்புதலும் விருப்பமும்
நமக்குள் ஒன்றாகி,
வளர்ந்த நிறைவில்
வைகை வெள்ளமோ?
மூச்சுக் காற்று
அரிவையின் செவியில்
அருவியின் சத்தமோ?
அருவியும் சரி
ஆறும் சரி;
இரத்த ஓட்டத்தை
இரகசியமாய் அதிகரிக்கிறது.
ஆறு ஸ்பரிசம் என
அருவி காமம் என..
பரிபாடல் சொல்லும் அன்பும் ஊடலும், அழகான மதுரையும்; என்னை இனம்புரியா உணர்விற்குக் கொண்டு செல்ல.. இசை நூல் எனும் பரிபாடலின் இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பு, இதற்கு இசை அமைத்த நல்லச்சுதனார் மருத்துவர் என்பது.
(1) விருப்பொன்று பட்டவ(ர் ) (உ)ளநிறை (உ)டைத்தென
வரைச்சிறை உடைத்ததை வையை வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை........
(2) ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்தமைந்த காமம்
வாடற்க வையை நினக்கு..
- நல்லந்துவனார், பரிபாடல் (6 ம் பாடல்).
.jpg)

