டிக்கெட்.. டிக்கெட்..
எங்க போர ? எத்தினி டிக்கெட் ?
எங்க சார் டிக்கெட் ?
இது சென்னை – மாமல்லபுரம் பேருந்து ஒன்றின் நடத்துனர் பேச்சு. முதல் வரி நடுத்தர வயது கொண்ட ஒரு பெண்ணிடமும், அடுத்த வரி என்னிடமும் பேசப்பட்டவை.
அந்தப் பெண்ணின் அழுது கொண்டு இருந்த குழந்தையோ, அவரின் சாயம் போன புடவையோ, ஆங்கில வாடை இல்லாத தமிழோ, இல்லை சென்னைத் தமிழ் உச்சரிப்போ, இப்படி நடத்துனர் பேசியதன் காரணாமாயிருக்கலாம்.
சிறிது தூரம் கடந்திருக்கும்.
‘உங்க போன் தரீங்களா. ஒரு மிஸ்டு கால் பண்ணிட்டுத் தரேன்’ – அந்தப் பெண்.
‘நம்பர் சொல்லுங்க. நானே செய்றேன்’ – நான்.
‘……….’ .
‘பண்ணிட்டேன். கால் வந்ததும் தரேன்’.
சிறிது நேரம் கழித்து,
‘வல்லியா’ ?
சிறிது பேருந்து நிருத்தங்கள் கழித்து, ‘வல்லியா’?
‘நான் கையிலே தான் வெச்சிருக்கேன். வந்ததும் தரேன்’ என்று சொல்லி விட்டு நினைத்தேன். ஏதோ அவசரம் போல் இருக்கிறது. இப்படிச் செய்தால் என்ன. சரி கேட்டுவிடலாம்.
‘நான் வேணும்னா கால் பண்றேன்’.
‘சரி’ என்ற பதில் வரவே அந்த எண்ணுக்கு முழு அழைப்பு விடுத்தேன். பதில் இல்லை.
‘யாரும் எடுக்கலியே’ – இது நான்.
‘நாங்கொ ஊர்க்குத் திரும்ப வரம்னு அவர்க்கு தெரியாது. அதான் சொன்னா பஸ் ஸ்டாண்டுக்கு வந்து இட்னு பொவாரு. சரி உடு தம்பி எதனா வேலயா இருக்க போவுது’.
சிறிது வெயில், சிறிது தூறல், சிறிது மரக்கூட்டம், நிறைய வாகனங்கள் கடந்தன.
வேரோர் இடம், வேரொரு பேருந்து நிருத்தம், வேரொரு பெண்.
‘ஏம்மா, குழந்தைக்குத் தனி சீட்டா? மடியில குழந்தைய வெச்சுகிட்டு கொஞ்சம் தள்ளி உக்காருங்க’ - அந்த வேரொரு பெண்.
‘இன்னாத்துக்கு, கொயந்துக்குந்தான் தனி டிக்கெட் எட்திருக்கேனே ? அதெலா வொண்ணும் முடியாது’ – இது அந்த மிஸ்டு கால் பெண்.
வேண்டும் என்றால் குழந்தையை நான் எடுத்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இடம் கொடுங்கள் என்று சொன்னேன். :)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக