பாளையம்கோட்டையில் இருந்து சேரன்மாதேவி வரை சென்று, சேரன்மாதேவியில் இருந்து வழி விசாரித்து (ஊரின் வழியே சென்று பேப்பர் மில் பக்கத்தில் திரும்பினால் வரும் பழைய பெருமாள் கோயில் என்பது சூட்சமம் - மாற்றிக் கேட்டால் பதில் வருவது சிரமம்) போய்ச் சேர வேண்டும். பலருக்கும் மறந்து போன அந்தக்கோயில் செல்ல, பேப்பர் மில் திருப்பத்தில் இருந்து இரண்டு சக்கர வாகனமிருந்தால் மதி / மிதி. கார் என்றால் கவலை வேண்டாம். இடுகாடும், சில`காட்டு எருமைகளும் தவிர வேறு யாரும் அந்தப் பக்கம் வருவதில்லையாம்.
தென்னை மரங்களின் அணிவகுப்பும், அணில்களின் சத்தமும், ஆங்காங்கே இருக்கும் சமாதிகளும் நம்மைக் கண்டுகொள்ளாது இருக்க, கன்றுகளும் எருதுகளும் வழி விடாது நிற்கும். ஒரு வேலை, இவைகளின் சொந்தக்காரர் வந்தால், நமக்கு வழி கிடைக்கும். இல்லையெனில் நம்மூர் ரெயில்வே கேட் போல் காத்திருக்க வேண்டியது தான்.
வளைந்த இழைந்த ஒற்றிப் பாதையில் நேராகச் சென்றால் (பொருள் குற்றம் வந்தால் மன்னிக்கவும் - எனக்கு இப்படித் தான் வழி சொன்னார்கள்), ASI - பாதுகாக்கப்பட்ட சின்னம் என்ற பலகை வரவேற்கும். அங்கே ஆற்றில் குளிக்க வந்தவர் (கள் / கல்) ( ? நாட்டு நடப்புகள்) பேசும் இடம் கூட ஆர்ப்பின், உளியின், பதம் தாங்கியிருக்கிறது.
"அய்யர் காலை 8.30 பூசை முடித்துச் சென்று விட்டார், இனி நாளை தான்" என்று ஒரு குரல்.
'ஓகோ' - இது நான்.
"சார், அவர் சும்மா சொல்றார். மூலஸ்தானம் தான் பார்க்க முடியாது. நாம மற்றத சுத்தி பாக்கலாம்" - பணியாளர்.
கண் கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தது போன்ற உணர்வு.
பேசிக்கொண்டே அவர் கோவில் கதவைத் திறக்க, நமக்குத் தெரிந்த ஒரு உருவம் - சிங்கம். (உபயம் - மாமல்லபுரம்).
"இது சிங்கத் தூண், அதுக்குப் பின்னாடி கல்வெட்டு".
'பின்னாடி சுவத்திலையா?'.
"ஆமா சார். ஆனா என்னனு கேக்காதிங்க".
'எனக்கும் அது தெரியாது. ரெண்டு மூணு எழுத்து படிப்பேன், முழுக்க தெரியாது'.
"ஓகோ, நீங்க இதுல ஏதும் M. Phil பண்ற மாதிரியா".
'சார், நான் டாக்டர். MD பண்றேன்'.
"எதுல சார்?"
'??? ??? ம். Forensic Medicine'.
"Forensic Science தான உண்டு".
'??? இல்ல சார் ரொம்ப வருஷமாவே FM degree உண்டு'.
சற்று உள்ளே, ஆதிசங்கரர் மேடம் ஒன்று இருக்கிறது. அதை எதிர்த் திசையில் விட்டு விட்டுச் சென்றோம். வெளி வாசலும் உள் கோபுர வாசலும் எதிர் எதிர் திசையில் இருக்கின்றன. (நமக்கு இந்த சாஸ்திரம் எல்லாம் பரிச்சியம் இல்லை).
"இங்க, இந்தப் பீடமும் டிசைனும் முக்கியம். இந்த டிசைன் வச்சு தான் வருசம் கணக்கு பண்றாங்க".
'ம்'.
இந்த யானையின் நெற்றியில் நாமம் எல்லாம் நன்றாகத் தெரிகிறதே. அடடா. இதைச் செய்தவன் என்ன திறமையுடன் இருந்திருப்பான் என்று நினைத்துக்கொண்டேன்.
"இந்தா மேல தெரியிற இடம் சுத்தி வர இருக்கும் வழி. இதுல படி ஏதும் இருந்திருக்கணும். இப்ப இல்ல".
"இனிதான் முக்கியமானதெல்லாம் இருக்கு சார். இந்த நாலு சிற்பத்த பாருங்க. நான் கோயில் உள்ள திறக்கறேன்".
அவர் உள் மண்டபம் திறந்தார். லைட் போட்டார். நான் உள்ளே நுழைந்ததும் என் கேமரா அலறியது.
No Chance. No way.
Low battery.
பையில் தண்ணீர், பிஸ்கட், டவல், அவசரத்திற்கான மருந்துகள். நானா மறந்திருப்பேன்.
நான் தான் நைட் சார்ஜ் போட்டேன். காலைல திரும்ப லேப்டாப்ல சேத்து சார்ஜ் போட்டேன்.
"இப்படி தான் சார், சிலருக்கு நடந்திருக்கு. இந்தப் பெருமாள் சக்தி வாய்ந்த தெய்வம்".
'??? என்ன ஆச்சு? சார்ஜ் போட்டேன். சார்ஜ் ஆச்சு. இப்போ சுவிட்ச் ஆப் ஆயிருச்சே. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்'.
"உள்ள பாப்போம் சார்".
உள்ளே சென்று சிற்பங்களைப் பார்த்தேன். என் கண்களும் மனதும் அந்தக் கலையின் வளைவுகளில் ஆழ்ந்திருக்க, ஒரு குரல் - என்னாச்சு? (நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்).
திரும்ப, பாளையம் கோட்டை புறப்பட்டேன். புறப்படும் நேரம் அவரிடம் சொன்னேன், 'நான் திரும்ப வருவேன் - battery problem னு நினைக்கிறன்.
நீங்க எவ்வளவு நேரம் இருப்பிங்க'.
"8.30 to 5.45 சார், வாங்க".
அடுத்த பாகம் விரைவில்.
About Bakthavatsala Perumal temple, Cheranmadevi. One of ASI protected monuments in Tirunelveli District.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு