பாக்டீரியா காலம் முதல் facebook (முகநூல்) காலம் வரை நாம் அடிக்கடி கேட்பது இந்த வார்த்தை. நம்மில் பலர் இதைக் கடந்து வந்திருப்போம். இன்னும் சிலர் அதைப் பிடித்து இன்னுமே தொங்கிக் கொண்டிருப்போம். இன்னும் சிலர் அந்த வார்த்தையின் அர்த்தம் புரியாமலே அதைச் சொல்லி வைத்திருப்போம்.
கட் (நிற்க). அந்த வார்த்தை என்ன?
.?
இல்லை.
..?
இல்லை.
...?
இல்லை.
வேறு என்னப்பா?
அந்த ஆஸ்கார் வார்த்தை தான் 'முட்டாள்', 'அறிவு கெட்டவனே'.
ஏன் இந்த வார்த்தையைச் சொன்னால் என்ன?
சரி. சில அறிவு நிறைந்த அறிவாளர்கள் சொல்கிறார்களே.
நானே அறிவாளிதான், பிறகென்ன நான் அப்படிச் சொல்வேன் என்பவர்களும் நிற்க, கவனிக்க.
இந்தத் தமிழ் என்ற மொழியில் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்கும், இணைந்திருக்கும்.
அட, இது இந்தி எதிர்ப்பும் இல்லை ஒன்றும் இல்லை.
இந்தத் தமிழன் செய்த உன்னதமான பலவற்றுள் மொழியும் ஒன்று, அதன் இனிமையும் ஒன்று.
இங்கே அறிவைக் குறிக்கும் சொற்களில் 'மதி' என்பதும் உண்டு.
ஏன் சொல் கண்டவர்கள் இப்படிச் சொன்னார்கள்?
தமிழ் இயல் மொழி (இயல்பான மொழி).
அது தொட்டே பெயர் வைத்தான் நம் பாட்டன் மதி என்று.
பயந்து இரசிக்கையில் இருந்த நிலவும், அறிவு கொண்டு நிமிர்ந்து நின்று நிலவைப் பார்த்ததற்கும் என்ன வேறுபாடு இருந்திருக்க முடியும்.
பரிட்சைக்குப் படிப்பதற்கும், பின்னர் நிதானம் கொண்டு இதையா இப்படிப் படித்தோம் என்று நமட்டுச் சிரிப்பு கொள்வது போல் தானே.
நிலவு:
வளரும், முழுமை பெரும்.
அழகு.
காதல்.
உயர்ந்த இடம்.
பொதுச் சொத்து.
அது இருக்கும், நீ பார்த்தாலும் சரி, இல்லாது ஒழிந்தாலும் சரி.
நெடுந்தொலைவில் இருந்தும் அலை சீற்றம் உண்டாக்கும் (முழுமதி அலைச் சீற்றம் - gravitational pull)
முழுமையிலும் கரும் புள்ளிகள் இனிமை.
முழுமையிலும் கிரகணங்கள் உண்டு (Eclipse).
கிரகணங்களிலும் கிரணங்கள் உண்டு (diamond ring on eclipse).
அறிவு:
வளரும், முழுமை பெற்றதை உணர்ந்ததும் குறையும், மீண்டும் முழுமை
பெரும்.
அறிவு அழகு.
பிறரை உன் பால் அன்பு கொள்ளச் செய்யும் (அறிஞர் அண்ணாவை திட்டித் தீர்த்தார் கவியரசு கண்ணதாசனார், அண்ணா சொன்னார்: 'அந்தத் தமிழில் நான் மயங்கிவிட்டேன், அவர் திட்டினால் என்ன, புகழ்ந்தால் என்ன').
பொதுச் சொத்து. நீ கற்றுக்கொள். கற்பி.
புரட்சிக்கான வித்து சிலரின் அறிவில் தான் இருக்கிறது. அவர்கள் தொலைவில் இருந்தாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி.
அது இருக்கும் நீ மதித்தாலும் சரி, மிதித்தாலும் சரி. அறிஞன் தன அறிவை பிறருக்குக் கொடுக்கிறான். உன் விமர்சனம் அவன் செயலை ஏதும் செய்வது இல்லை.
அறிஞனுக்கும் சறுக்கல்கள் உண்டு.
வஞ்சம் கிரகணமாய் சூழும்.
அறிவு அதில் கிரணங்கள் பாய்ச்சும்.
இதுவும் அது: பிறரை மதி என்றான். 'மதி'த்தலும் நிலவென்க. நீ பிறரை மதி. அவனும் உன் போல் நிலவு தான், உன் போல் அறிஞன் தான் என்பதாலோ?
சில நேரங்களில் தமிழின் சொல் ஆழம், மதிக்க வைக்கிறது.