செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

Is தொல்காப்பியம் viable


"மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே"
                                                     தொல்காப்பியம் (எழுத்து - மரபியல் - சூத்திரம் 18)


மெய்யின் வழி அது உயிர் தோன்றும் நிலையே என்பது மெய் எழுத்துக்கள் இருக்க, அதன் வழியில் உயிர் சேர்ந்து உயிர்மெய் தோன்றும் நிலை கொண்டது உயிர் மெய் என்றவாறு.
உதாரணம்: க் + அ = க என உருவாக.

இது ஒரு புறம் இருக்க, நமக்குத் தெரிந்த வேறு ஒன்றைப் பார்போம்.


There lies the body of fetus in utero (inside of uterus); to which life adds in the form of lung maturity so as to make it viable for separate existence. From a mere body of fetus turning into a viable fetus for separate existence it remains in the womb. For what seems to be an important change over, the lung to respire body becomes human. is this we call life adding? is this why legal systems take into consideration the separate existence? (Textbooks of Medicine On viability)


தனியாக இயங்க முடிவதை viability என்று சொல்கிறோம். ஒரு பிண்டம் (மெய்) உயிர் பெறுகிறது, தனியாக இயங்க முடிகிற நிலையை அடைகிறது. இது நுரையீரல் முதிர்வை பொறுத்தது என்பது மருத்துவம். அது கொண்டே, சட்டங்கள் கூட கரு சம்பந்தமான வழக்குகளில், கரு தனியே இயங்கக் கூடியதா என்று கேட்கின்றன.

மெய் (உடல்) இருக்க, உயிர் சேர உயிர்மெய் நுரையீரல் காற்றில் உருவாகி வருகிறது (அது புணர்வில் உயிர் மயங்கி மெய் சேர்கிறது என்பது தனிக்கதை) என்பது தொல்காப்பியம்.

எப்படி இந்தத் தமிழன் இப்படி மொழி செய்தான். எப்படி இவர்களால் இதெல்லாம் உணர முடிந்தது ?

"ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம்" என்றது இதற்குத்தானோ?.

தொல்காப்பியம் இன்றைக்கும் இயங்கக்கூடியதே (viable). 

ஞாயிறு, 24 நவம்பர், 2013

நேற்று இல்லாத மாற்றம் என்னது

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது.
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சாதியின் சேர்க்கை என்பதா
சொல் மனமே.


கொடியில் பூக்கள் எல்லாம் காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம்  உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
மழையின் பயணம் எல்லாம் மண்ணைத் தீண்டும் வரை
படகின் பயணம் எல்லாம் நதியைத் தாண்டும் வரை
மனித பயணங்கள் எல்லாம் வாழ்க்கை தீரும் வரை.



காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது
கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றது.
கிளைகள் வீழ்ந்தாலுமே இலையில் துளி உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவு உள்ளது
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது..
                                                                                          -  வைரமுத்து.



இந்தப் பாடல் தான் முதன்முதலாக சோகமும் பிரிவும் எனக்கு சொல்லிக் கொடுத்தது. நீண்ட வருடத் தேடலில், மறதியில் சமீபத்தில் தான் இதைக் கண்டுபிடித்தேன்.
காலையும் இரவும் செடிகளோடு சிரித்து, பூக்களைத் தடவி; தனியாய் நான் பார்த்த வான் நிறமும், என்னைக் கடந்து போன பிறைகளும்,  . அந்த நினைவும் நிறமும், துளியும் மாறாமல்..

சனி, 24 ஆகஸ்ட், 2013

நானோர் அசடன் நாளைய கிறுக்கன்.






பார்க்கும் இடமெங்கும்
பாறையின் அந்தகாரம்.
முக்கால் நிலவொளி
முனகும் காற்றொலி.
நெருப்புப் பந்தம்
பறையின் சந்தம்.
காட்டுப் பன்றி கூட்டு மந்தி
தங்க அழகு மிளா
இங்கே கோ உலா.  

வெள்ளை அருவியே கொள்ளைக் கருவியே
வெள்ளி வேலும்
வெள்ளி வாளும்
வெள்ளைக் கொடிகாட்டும்
வெள்ள நீரின்
கள்ளத் தனமோ கள்ளி தனமோ

கடல்கொண்டேன் குடல்தாகம் 
உடல்கொண்டேன் கூடல்தாகம்.
நாடும் எனதோ
வாடும் மனதோ.
அரண்மனை எனதோ எம்மனை இனிதோ.

உன்னை விடுத்து உலகெலாம் வென்று
சரித்திரம் படைத்தேன்
ஒருகுடை ஏற்றினேன்.
யானோ அரசன் யானோ வளவன்
நானோர் அசடன் நாளைய கிறுக்கன்.

இறந்ததும் என்னை 
இங்கே புதையும்
நான் கொண்டுசெல்ல  நினைப்பது 
அகத்திய தமிழும்
அருவி நீரும்.

மறுபிறப்பு இருந்தால்பாறையாய் பிறப்பேன்.
நுரையைத் தாங்கி  கரைந்து போவேன்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

திருமூலர்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

திங்கள், 17 ஜூன், 2013

வை கை


விருப்பம் ஒன்றான பின்
மறுப்பும் உண்டோ.
அலைபோல் ஆசைகள்,
வலைபோல் சூழ்நிலை,
காற்றில் நிற்கும்
ஒற்றை விதையாய்,
எத்தனை காலம்
எத்தனை பாரம்.
விரும்புதலும் விருப்பமும்
நமக்குள்  ஒன்றாகி,
வளர்ந்த நிறைவில்
வைகை  வெள்ளமோ?
மூச்சுக் காற்று
அரிவையின் செவியில்
அருவியின் சத்தமோ?



அருவியும் சரி 
ஆறும் சரி;
இரத்த ஓட்டத்தை
இரகசியமாய் அதிகரிக்கிறது.
ஆறு ஸ்பரிசம் என 
அருவி காமம் என.. 









பரிபாடல் சொல்லும் அன்பும் ஊடலும், அழகான மதுரையும்; என்னை இனம்புரியா உணர்விற்குக் கொண்டு செல்ல.. இசை நூல் எனும் பரிபாடலின் இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பு, இதற்கு இசை அமைத்த நல்லச்சுதனார் மருத்துவர் என்பது.


(1) விருப்பொன்று பட்டவ(ர் ) (உ)ளநிறை (உ)டைத்தென
வரைச்சிறை உடைத்ததை வையை வையைத்
திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை........




(2) ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்தமைந்த காமம்
வாடற்க வையை நினக்கு..

                                                          -  நல்லந்துவனார், பரிபாடல் (6 ம்  பாடல்).

ஞாயிறு, 9 ஜூன், 2013

நீ ஆ ? நான் ஆ ?



கடற்கரை மணலில் 
கைவிரல் மணமில் 
நிலவொழுக
அலைசிரிக்க 
முதலில் தொலைவது 
நீயா நானா? 

வாகனப் புகையில்
படிகிற கரியில்
வெயிலடிக்க
நிழல்தர 
முன்னால்  நடப்பது
நீயா நானா?

கேரளத்து சேலையில்
 உன்கை படுகையில் 
கட்டிக்கொள்ளவோ 
கட்டிவிடவோ
முதலில் கேட்டது
நீயா நானா?

கட்டிகொள்ளத் தெரியாதென 
கட்டிவிடத் தெரியாதென 
கோபம் உயர
சண்டை வளர்க்க 
முதலில் சொன்னது
நீயா நானா?

சனி, 1 ஜூன், 2013

உனதலையும் எனதலையும்



முடியும் என்ற நிலையிலும்
முடி ஒதுக்கி - சிலர் 
என்னைத் தேடி வருகையிலும் 
நான் காப்பது ஒழுக்கமல்ல
நேர்மை. 
புலன்கள் அடங்காது
புலம்புகையில்
புத்தி தப்பி சலனமாகையில் 
உன்பெயர்தானே துணையாகிறது.
நானென்பதே  நீதான்
நீயென்பதால் நானும் மனிதன் தான்.




திங்கள், 8 ஏப்ரல், 2013

மனைவி






மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல 
உருவும் உயர்குலமும் எல்லாம் - திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து 
போம்போ தவளோடு போம்.

                                                                            - மூதுரை 
                                                                                 பாடல்  20


மருவினிய சுற்றமும் - சேர்ந்த, சார்ந்த இனிய சுற்றமும் (சொந்தமும், சுற்றி இருப்போரும்), வான்பொருளும் - வானம் போல பரந்த செல்வம்  (அ ) வான் நட்சத்திரங்கள் போல மின்னும் அளவில்லாத செல்வம், நல்ல உருவும் - நல்ல உருவம்  என்பதை மற்றவர் மனதில் நமக்கான உருவம் நல்லதாய் இருக்கும் என, உயர்குலமும்  எல்லாம் - நல்ல குடும்பம் எனும் பெயர் வரவும் (இந்த அனைத்தும்), திருமடந்தை ஆம் போது அவளோடும் ஆகும் - மணப்பெண் (அ ) திருமகள் வருகையில் அவளோடு சேர்ந்து வரும், இருக்கும். அவள் பிரிந்து போம் போது அவளோடு போம்  - அவள் பிரிந்து செல்கையில் அவளோடே சென்று விடும்.

இத்தகைய செல்வம் அனைத்தும் திருமகள் உன்னோடு இருக்கையில் இருக்கும் , அவள் பிரிந்து செல்கையில் அவளுடனே சென்று விடும்.

நல்ல மனைவி இருந்தால் அனைத்தும் இருக்கும், அவள் பிரிந்து போனால்,அதோடு அனைத்தும் பிரிந்து போகும்.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

கொக்கோகம் - தோகை விரிக்கும் கரும்பு



நன்னலன்றி வேம்புநுகர் காமத்துரோகிகள் போற்
பின்னையொரு தெய்வத்தைப் பேசாமே - எந்நாளும்
சாற்றுவதும் காமகலை சாதிபதுங் கரணம்
போற்றுவோம் காமனடிப் போது.


இலக்கணம்:
கொக்கோகம் எனும் மதன நூலின் முதல் பாடலாக இந்த வெண்பா அமைந்துள்ளது. இரண்டாம் அடியில் எந்நாளும் என்ற தனிச்சொல் இருப்பதால், இது நேரிசை வெண்பா. நன்னல், பின்னை; சாற்று, போற்று என இரு வேறு எதுகைகள் இருப்பதால் இரு விகற்ப நேரிசை வெண்பா.

பொருள்:
நன்னலன்றி வேம்புநுகர் - கரும்பு இருக்கையில் வேம்பு எடுத்து பயன்படுத்தும் (நன்னல் - கரும்பு) காம துரோகிகள் போல், பின்னையொரு தெய்வத்தை - வேறு தெய்வத்தைப் பற்றி பேசமாட்டேன் (பின்னை - வேறு, பேசாமே- பாடாது, போற்றாது ). சாற்றுவதும் காமகலை - சாற்றும் என்பதற்கு தீர்மானமாய், தீர்க்கமாய் சொல்வது என்று எடுத்துக்கொள்ளலாம். எந்நாளும் சொல்வதும், செய்வதும் (சாதிப்பதும்) காம கலை. அதற்கு காமனைப் போற்றுவோம்.


பின் இணைப்பு :
தோகை விரிக்கும் கரும்பு  இருக்கையில், தோகை விரிக்கும் மணப்பெண் இருக்கையில்; மற்ற நினைவும், சுவைத்திட வேம்பும் ஏற்றதா யோசி இனி.


தோகை விரிக்கும் 
கரும்பு  இருக்கையில்  
தோகை விரிக்கும்
மணப்பெண் இருக்கையில் 
மற்ற நினைவும்
சுவைத்திட வேம்பும்
ஏற்றதா யோசி இனி.


புதன், 20 மார்ச், 2013

அகத்தியம்

முழுமதிக் காட்டில் மூலிகை வாசத்தில், காட்டுப் பன்றிகள் ஓலமிட, உடல் ஒடுங்க,பற்கள் படபடக்க  நடந்து, ஆஆஆஆஆஆஆ அந்த அழைப்பு தான் அந்தச்  சாரல் தான் அந்த அந்தகாரந்தான்,
எத்தனை பேரை இந்த அருவி பதம் பார்த்திருக்கும். எத்தனை பேர் இந்த அருவியில்  பக்குவம் அடைந்திருப்பார்கள்.
அடிமேல் அடியாய் அருகில் சென்று நனைந்து அமர்ந்தேன். நூற்றாண்டுகள் தாண்டிய குரல் கேட்டது. 
இங்கு கொட்டும் அருவிகளில், அகத்தியர் அருவிக்கு ஒரு குணம் உண்டு. எந்த அருவியும் அதற்கும் பாறைக்கும் ஆன இடைவெளியில் நம்மை எளிதில் அனுமதிக்காது. இந்த அகத்தியர் அருவியில் அருவிக்கு உள் சென்று, பாறையில் அமர்ந்து ரசிக்கலாம் அதன் பின்னழகை.
இந்தத்  துளிகள் எவ்வளவு காலம் முன் தோன்றியிருக்கும், எத்தனை உயிர்களை வருடி இருக்கும். நீர் உயிர் நாடிதான், வாழ்க்கைக்கான அமுது தான்.
நான் நாய்களோடு பேசுவேன், நெடு மரங்களோடும் பேசுவேன். இப்போதெல்லாம் பாறைகளுடனும் பேசுகிறேன்.

பாறை சொன்ன கதை, அடுத்து..

வியாழன், 3 ஜனவரி, 2013

4321123443211233211221

 சில நாள் சில வேலை 
சேரும்  இரு பாம்புகள்
பார்த்து உறைந்த
தருணம்.
குளிரில் 
அம்மாவின் அணைப்பில்
எங்கோ ஓடிய எண்ணங்களில்
மறைந்து மறந்து நிறைந்தது நீயோ.
இறந்ததும் எங்கே போவோம் என்றே 
கண்ணீரோடு பயந்த இரவுகளில்
இடுகாட்டில் தேடலில் 
அமைதி.
அமர்ந்த
திட்டுகளின் எறும்புகள் 
முத்தமிட்டு ஊர்ந்து மொழிகையில் 
சாரமோ  மின்சாரமோ பூச்சரமோ 
உன் பெயரோ
நாமோ.
கருங்குயில்
இணைக்காக இரைஞ்ச
இறையாய் விரிந்தது 
மேகமோ.
நட்சத்திரமோ
பூகம்பமோ 
மோகமோ
தேனோ
அ.

சனி, 29 டிசம்பர், 2012

ஒரு மொழி

     மொழிக்கும் எனக்கும் ஆன தூரம் நீளும் பொழுது எனக்கும் எனக்கும் ஆன தூரமும் நீள்கிறது. பாடல்களே எனக்கு அனைத்தும் சொல்லிக் கொடுக்கின்றன. பெரும்பாலும் ஊமையாகவே இருக்கும் நான், அதிகம் பேசுவது வரிகளுடன் தான். அருவிக்கு பயப்படும் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாய் நனைந்து சிரிப்பதாய், என் கவிதை அறிமுகம் இருக்கவில்லை. அருவியை நிமிர்ந்து பார்த்தே உள்ளே செல்லும் என் பழக்கம், இதிலும் தொடர்ந்தது. மூச்சுத் திணறி மீண்டும் முழுக ஆசைப்பட்டவன். அதனால் தானோ என்னவோ ஆற்றைபோலவே அருவிகளும் என் கை பிடித்து அழைத்து போகும். எதிலும் எளிதாய் குறைகள் கண்டுபிடிக்கும் என் குறை தளைகளின் புணர்வில் நிறைந்து வழிகிறது.
     சோதி மிக்க நவ கவிதை எழுதிட நானில்லை. கேட்காத முறை, பார்க்காத கோணம், இந்தப் புதுமை, அந்தப் புதுமை எதுவும் என்னிடம் இல்லை. 
     அன்று எழுதிய பாடல்கள் உரைகளாலேயே கிழிக்கப் பட்டன. கரையானாலும் கரைகளின் பாதுகாப்பிலும் கரைந்து போயின. இலைகள் தாண்டி பூனைகளிடம் இழைந்து, நாய்கள் தாண்டி பனைகளுடனும் பேசி பாடல்களின் பேச்சை கவனிக்கிறேன். கை குலுக்கி, அருகே அமர்ந்து உற்றுக் கேட்கும் வேளையில் கேட்கிறது அவை யுகந்தோறும் காடு மேடாய் காற்றாய் ஒளியாய் சுமந்து வந்தவை. 
     பாடல்களின் மொழி ஒன்று உண்டு. வெறும் அர்த்தக் கட்டுக்களை சுமந்து வரும் விறகு வியாபாரியாய் அவை இல்லை. மொழியுடன் உறவு கொள், ஒவ்வொரு பாடலுடனும் பேசிப்பழகு. ஒவ்வொரு எழுத்தின் அடிநாதமும், ஒவ்வொரு எழுத்தின் அடியிலும் பிரபஞ்ச அடிநாதமும் உனக்காய் காத்திருக்கும். மழைத்துளிகளுக்கு ஒரு மொழி, சருகுகளுக்கு ஒரு மொழி, மொழிக்கொரு மொழி. அதில் இருக்கிறது என் மொழி. 
     எனக்கும் மொழிக்குமான மொழி ஒரு மொழி, எனக்கும் எழுத்துக்குமான மொழி ஒரு மொழி. 

திங்கள், 24 செப்டம்பர், 2012

பிச்சைக்காரியும் கொஞ்சம் மணலும்

                               இது ஓர் ஏக்கம். வியப்பு. லூசு  என்று எல்லோரும் சொல்லும் சிலரின் அன்றாட வாழ்க்கை. அவள் யார்? தெரியாது. எப்படி இங்கே? தெரியாது. ஏன் இப்படி ? தெரியாது.
                              ஒரு அழுக்குச் சட்டையோடு எப்போதும் என் விடுதியின் சுவற்று நிழலில் இருப்பவள். கொட்டிவைத்த மணலில் புரண்டு கொண்டு, உடலின் மறைவுப் பகுதிகளை பற்றிக் கவலைப்படாது இருப்பவள். கலைந்த முடி, கவலை காட்டாத முகம். எப்போதாவது சிறு நகை. அடடா என்ன வாழ்க்கை? கஞ்சா அடித்து விட்டு ஒருசிலர் அவள் பக்கத்தில் படுக்கும் பொழுது அவளின் ஈன ஸ்வரம். வெட்கமோ  கற்பென்பதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவள், பிடிக்காதார் தொடுகையில் சினுங்கிடும் குழந்தையாய்.
                              அந்த மணற்பறப்பு அவள் சிம்மாசனம். நாலடி நிழலோ சமயத்தில் ஓரடி நிழலோ, அவளின் வீடு. என்னால் முடிந்தது, இரவில்  எனக்குத்தரப் படும் ஒற்றை வாழைப் பழத்தை அவளுக்குக் கொடுப்பது.
                           அவள் தருவது என்னைப் பார்த்ததும் சிறு சிரிப்பு.

இயல்

எனக்கு  வேறு வேலையில்லை
வேளைமறந்து என்னையே பாட
அணுவிலிருந்து  அண்டம்வரை
நீளும் என்னியல்பும் எண்ணியல்பும்
மண்ணும் மன் மதனமும்
புண்ணும் பல பிணமும்
பித்தமும் ஓட்டு நத்தமும்
பிரிந்த மஞ்சள் சூரியனும்
பறித்த  ஊமத்தம் பூவும்
 ஈனமும்   மெல்லீனமும்
உள்ளும் உள்ள
கடமும் 
 அட கடவுளும்
கடை உளுந்தும்.. 

திங்கள், 23 ஜூலை, 2012

மீண்டும்

மழை
            மீண்டும் என்னைக் குழந்தையாக்குகிறது
            சாரல் தூவி சிரிப்பை விதைக்கிறது
            கலைந்த மேகங்களுக்கு
            இலையின் ஒலியில்
            என்னதான் சொல்கிறது ?

வியாழன், 19 ஜூலை, 2012

நான் நாத்திகன் ஆனது எப்போது?

நான் நாத்திகன் ஆனது எப்போது? தெரியாது. ஏன்? சொல்கிறேன். சாமியாட்டம், பேய் ஆட்டம் இதெல்லாம் பார்த்து பயந்து ஒழிந்து கொண்டிருந்த நேரம்,  ஒரு தாத்தா சொன்னார் : 'ஏன்  என்று கேட்காதவன் முட்டாள்'. அந்தத் தாத்தா மீது கோபம் எனக்கு. காரணம், அம்மாவிடம் கேட்டால், 'அப்டிலாம் பேசாதடா '. அப்பாவிடம் - 'அப்புறமா சொல்றேன் போய்  தூங்கு'. நானும் மறந்து விட்டேன் கேட்பதை . அதே தாத்தா சொன்னதென்று பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொன்னது : 'ஏன், எதற்கு, எப்படி என்று கேள்'. தயங்கித் தயங்கி அவரிடம் கேட்டேன், 'சார் ஏன் இப்டி கேள்வி கேக்கணும்' ? அவர் சொன்னார் : 'நீ கேட்க ஆரம்பித்து விட்டாய், இனி கேள்வி கேட்காமல் உன்னால் இருக்கமுடியாது'.  நன்றி அந்தத் தாத்தாவிற்கு  (பெரியார்) இல்லை. பதில் சொல்லாது விட்ட என் பெற்றோருக்கு.

இன்று முது கலை மருத்துவம் படிக்கும் நானும், என் சீனியர் ஒருவரும் பேசிக்கொண்டிருந்த பொழுது, கோவிலுக்குச் செல்லும் பழக்கம் இல்லை என்று நான்  சொல்ல, மாலையில் கோவிலுக்குச் செல்வோமே என்றார். சரி என்றேன். அங்கே, நான்  கை ஏந்தி நிற்கையில்  ஐயர் வந்து பிச்சை போல் திருநீறு போட்டார். திடீர் அன்புடன் அந்த சீனியர் விபூதியை என் நெற்றியில் இட்டு, பார் கடவுள் உன் மனதை மாற்றி விட்டார். நீ திருநீறு கூட வைத்துக்கொண்டாய் என்றார். ஒரு மனிதன் தனது சக மனிதனின் பழக்கங்களை மாற்ற முயல்வதும், அவ்வாறு மாற்றினால் அவனுக்கு உண்டாகும் ஆனந்தமும் அளவு இல்லாதது. அவருக்கும் அவ்வளவு ஆனந்தம் முகத்தில்.


சிறிது நேரம் கழித்து நான் சொன்னேன், 'நான் நாத்திகம் கற்றதே கோவிலில் தான். இந்த விபூதி எல்லோரும் ஒரு நாள் சாம்பல் ஆகவே போகிறோம் என்பதை  நினைவில் வைத்துக்கொள்ளவே தவிர, இதில் கடவுளின் அருள் ஒன்றும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை'.' உங்கள் மீதுள்ள அன்பால் வைத்துக்கொண்டேன், நம்பிக்கை என்பது என்னைப் பொறுத்தது. கல் உங்களுக்கு கடவுள், எனக்கு கலை'. 

பிறகு கோவிலுக்கு ஏன் வந்தாய் என்றொரு கேள்வி. மனிதன் இங்கே தன்னை மறந்த நிலையில் இருக்கிறான். எதுவும் யோசிக்காமல் ஏமாறுகிறான் ஏமாற்றப்படுகிறான். என் பாட்டன், பூட்டனின் தமிழ்ச் சமூகம் எவ்வளவு அறிவியலை இந்த கலைக்குள் நிரப்பியிருக்கிறது என்பதை உணர என்று சொன்னேன்.

எல்லோரும் வணங்கும் கடவுளை கோவிலிலே எதிர்த்துப் பேசுவது தான் பகுத்தறிவா என்று கேட்டார்.  ' நம்பிக்கை இல்லாதவனை நீங்கள் கட்டாயப் படுத்தும் பொழுது, நீ செய்துகொள் எனக்கு வேண்டாம் என்று சொல்லும் நான், செய்ய வைத்தே தீர வேண்டும் என்று இருக்கும் நீங்கள் இதில் எது பகுத்து அறிவது என்று அறிந்து கொள்ளும்' என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்..

வியாழன், 5 ஜூலை, 2012

kilinjal veedu

antha nilavum unthan nagaiyum
vantha alaiyum valaintha karaiyum
thanthak kaiyum thantha manamum
neentha mudiyaa neelvaan meenum
saantha(m) vaasanai sannathi neeyum
meentha kilinjalil moozhgiya naanum
eentha sottril inainthae naamum

ஞாயிறு, 11 டிசம்பர், 2011

engum

pinnaal paar nizhalaaga thodarven purangai pidiththu unnodu nadapen naan engumirupen ingirunthaalum.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011